In the heart of Mankulam, the New Life Center at St. Andrew’s Church ignited a wave of community action during Child Protection Week, blending advocacy with inspiration on August 30, 2025. Kicking off at 9:00 AM, the event—guided by Director Rev. P. Sudhakaran—launched with an energetic rally where kids proudly waved banners highlighting their rights and the need for vigilant protection.
Transitioning to the church’s open grounds, participants enjoyed a heartfelt welcome, worship session, lamp-lighting ceremony, and an upbeat dance performance that set a joyful tone.
Probation Officer Mr. S. Sivakaran from Mullaitivu District took the stage as chief guest, offering practical tips for parents on embedding child rights into everyday routines.
Complementing this, Mrs. Nirmala Jayasinghe of Mankulam Police Station delivered essential insights on navigating legal steps against child abuse, arming families with actionable knowledge.
The morning’s centerpiece, A captivating drama by New Life Center staff, vividly portraying parental duties in fostering safe, nurturing homes. Wrapping up with a communal lunch, the gathering strengthened bonds and renewed vows to safeguard the vulnerable.
Echoing this mission, theologian Dietrich Bonhoeffer once remarked, “The test of the morality of a society is what it does for its children,” reminding us of our sacred duty.
As Scripture affirms in Matthew 19:14 (NRSV), “Let the little children come to me; do not stop them; for it is to such as these that the kingdom of heaven belongs.”
Through such initiatives, the Church of South India Jaffna Diocese upholds its decades-long legacy of championing children’s education, rights, and well-being in a secure world.








தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம் பல தசாபங்களுக்கு மேலாக சிறுவர்கள் மத்தியில் சிறப்பாக பணி செய்து வருகின்றது. குறிப்பாக சிறுவர்களின் கல்வி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக திருச்சபை மிகுந்த கரிசனையோடு பணியாற்றி வருகின்றது.
தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம், மாங்குளம், புனித அந்திரேயா ஆலயத்தில் இயங்கும் புது வாழ்வு மையத்தின் சிறுவர் பாதுகாப்பு வார நிகழ்வு 30.08.2025 அன்று இயக்குனர் வண. பி. சுதாகரன் தலைமையில் காலை 9 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி சிறுவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து ஆலய திறந்த வெளியரங்கில் விருந்தினர் வரவேற்பு, இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுகளின் வரிசையில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவின் அதிகாரி திரு எஸ். சிவகாரன் அவர்கள் சிறுவர் உரிமைகளை நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை பெற்றோருக்கு விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து மாங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த திருமதி நிர்மலா ஜெயசிங்க அவர்கள் சிறுவர் மட்டத்தில் துஸ்பிரயோகங்கள் ஏற்படும் போது அவற்றை சட்டரீதியாக அனுக்கும் முறை குறித்த செய்தியினை பகிர்ந்து கொண்டார். இறுதியாக பெற்றோருக்கு பிள்ளைகள் மீதுள்ள பொறுப்புக்கூறலினை விளக்கும் வகையில் பணியாளர்களினால் நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஐக்கிய மதிய உணவுடன் நிகழ்வுகள் அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுற்றது.
JDCSI Communications
