Trichy Thanjavur Diocese Delegation’s Visit to Jaffna: Strengthening Bonds and Service Relations
Connections Emerge Through Service:
The Trichy Thanjavur Diocese, renowned for its longstanding commitment to education, medical care, tribal welfare, and women’s empowerment spanning over 75 years, recently embarked on a significant journey to Jaffna.
Warm Welcome in Historic City:
Led by the Rt. Rev. Dr. Chandrasekaran and Bishopamma Mrs. Rosaline Chandrasekaran, accompanied by Rev. S. Sudarsan and Rev. Jacob Livingston, Secretary of Erode-Salem Wedding, the delegation received a warm welcome in the historic city. To reinforcing deep-rooted connections, The Bishop’s Chandrasekan’s visit Invited by Bishop Velupillai Pathmathayalan, the delegation’s primary objectives were to engage in a three-day tourism program and witness the ongoing restoration efforts at Jaffna Diocese, held from March 15 to 17.
Bishop Chandrasekaran‘s Pivotal Role:
Bishop Chandrasekaran, hailed for his effective leadership as the Moderator’s Commissary of Jaffna Diocese in the past, played a pivotal role in the visit, despite prior commitments, prioritizing service over personal engagements.
Meaningful Engagements & Fruitful Discussions and Appreciation:
The itinerary included significant engagements such as morning meditation sessions led by Bishop Chandrasekaran, insightful Bible studies conducted by Rev. S. Sudarsan, and a heartfelt closing speech by the Bishop.
A fellowship lunch provided an opportunity for fruitful discussions on the development of Atheena and the broader diocese. Treasurer Mr. Joe Inbaraj’s detailed presentation on development plans garnered appreciation and set the stage for enhanced collaboration.
Renewed Service Relations:
Meetings with Jaffna Christian Union pastors and JDCSI pastors facilitated meaningful dialogue and renewed service relations, underscoring the importance of unity and collaboration within the Church of South India.
The delegation’s visit culminated in a worship service at the historical JDCSI cathedral, where Bishop Chandrasekaran delivered a poignant sermon, inspiring all present.
Commendation and Looking Ahead:
The Jaffna Diocese Communication Department commended the visit’s success, emphasizing its significance in fostering mutual understanding and strengthening service partnerships. As the delegation returned, the bonds emerged during their time in Jaffna serve as a testament to the enduring spirit of unity and collaboration within the Church of South India.
– JDCSI Communications.
யாழ் ஆதீனத்திற்கும் திருச்சி தஞ்சை மறைமாவட்டத்திற்குமான பந்தம்:
CSI- திருச்சி தஞ்சை திருமண்டிலம் கல்வி, மருத்துவ, பழங்குடியினர் நலன் மற்றும் பெண் கல்வி போன்ற ஊழியங்களை 75 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாக செய்து வருகிறது. இத்திருமண்டிலத்தில் 52 தொடக்கப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள், 17 மேல்நிலைப் பள்ளிகள், 2 நர்சிங் பள்ளிகள், 1 தொழில்துறை பயிற்சி மையம் மற்றும் 4 கல்லூரிகள் (கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, செவிலியர் மற்றும் சமூக நலனில் நிபுணத்துவம் பெற்றவை) ஆகியவை உள்ளன.
தென்னிந்திய திருச்சபையின் திருச்சி தஞ்சை பேராயத்தின் பேராயர் அறிவர் சந்திரசேகரன் அவர்களும் பேராயம் அம்மா திருமதி ரோசலின் சந்திரசேகரன், அருள்திரு.S. சுதர்சன், அருள்திரு. ஜேக்கப் லிவிங்ஸ்டன், ஈரோடு- சேலம் திருமண்டில செயலர் ஆகியோர் பேராயர் வேலுப்பிள்ளை பத்மதயாளன் அவர்களின் அழைப்பின் பேரில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்காகவும், யாழ் ஆதீனத்தின் திருப்பணிகளை பார்வையிடவும் பங்குனி 15, 16, 17 (மார்ச்) ஆகிய மூன்று நாள் வந்துசென்றார்கள்.
யாழ் ஆதீனத்திற்கும் திருச்சி தஞ்சை மறைமாவட்டத்திற்குமான பந்தம் தென்னிந்திய திருச்சபையின் உருவாக்கத்திற்கு முன்பிருந்தே தொடர்கிறது. குறிப்பாக பேராயர் சந்திரசேகரன் அவர்கள் எமது யாழ் ஆதீனத்தின் பொறுப்புப் பேராயராக திறம்பட செயல்பட்டவர். எமது ஆதீனத்தின் 5ஆம் பேராயரின் திருநிலைப்படுத்தல் வழிபாடு மார்கழி (டிசம்பர்) 10 திகதி நடைபெறுகிற போது தனது அமெரிக்கா பயணத்தை முன்கூட்டியே நிறைவு செய்து, இந்தியாவிற்கு வந்து அவ்வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொடுத்தார். இவையனைத்திற்காகவும் கடவுளுக்கு நன்றிசொல்லுவோம்.
யாழ் ஆதீன ஊழியர்களுடனும், பேராயருனும் திருச்சி தஞ்சை பேராயர் சந்திப்பு 16. 03. 2024 அன்று காலை: 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. பேராயர் சந்திரசேகரன் காலை தியானத்தில் வழிநடத்தினார். அதைத் தொடர்ந்து அருள்திரு.S. சுதர்சன் அவர்கள் திருமறை ஆய்வினை நடத்தினார். இரண்டாம் அமர்வினை ஈரோடு சேலம் திருமண்டல செயலாளர் அருள்திரு. ஜேக்கப் லிவிங்ஸ்டன் நடத்தினார். பேராயர் சந்திரசேகரன் அவர்களின் நிறைவு உரையுடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டுறவு மதிய உணவில் ஆயர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு புத்துணர்வு பெற்றார்கள். யாழ் ஆதீன பொருளாளர் எமது பேராயர் அறிவர் பத்மதயாளன் அவர்கள் ஆதீனத்தின் வளர்ச்சியைக் குறித்தும், தந்து ஐந்தாண்டு திட்டங்கள், ஆதீனம் மேற்கொண்டு வருகின்ற நற்செய்தி, சமூக, கல்வி மேம்பாட்டுசேவைகளை எடுத்தியம்பினார்கள். பின்னர் எமது பொருளாளர் திரு. ஜோ இன்பராஜ் அவர்கள் ஆதீனத்தின் வளர்ச்சித்திட்டம் குறித்தும் தாம் மேற்கொண்டுவருகின்ற வேலைத்திட்டங்கள் குறித்தும் விவரித்து குறி பின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.
யாழ் கிறிஸ்தவ ஒன்றிய போதகர்களுடன் பேராயர் சந்திரசேகரன் சந்திப்பு 16. 03. 2024 அன்று மாலை: 3-6 மணி வரை இச்சந்திப்பு நடைபெற்றது.
யாழ் ஆதீன பேராயர் அதிவணக்கத்திற்குரிய பேரருள்திரு. கலாநிதி பத்மதயாளன் அவர்கள் தலைமை இக்கூடுகை நடைபெற்றது. மெத்தடிஸ்ட திருஅவை, இரட்சண்ய சேனை (Salvation Army) அங்கிலிக்கன், போன்ற திருச்சபைகளின் அருட்பணியாளர்களோடு யாழ் ஒன்றியத்தின் போதகர்களை சந்தித்து பேராயர் சந்திரசேகரன் அவர்களின் குழுவினர் உரையாடினார்கள்.
பேராயர் சந்திரசேகரன் அவர்களின் முகநூல் குறிப்பில் கூறும்போது “நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் யாழ்ப்பாணம், இலங்கை தீவின் வட முனையில் உள்ள ஒரு நகரமாகும் இது. யாழ்ப்பாண குடா நாட்டில்
பேராயர் சந்திரசேகரன்
யாழ்ப்பாணம் கடற்கரை ஓரம் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது.வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஒரு இடம் யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம் மக்கள்மிக அழகான தூய்மையான ஆங்கில வார்த்தைகள் கலக்காத தமிழ் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பேராயர் சந்திரசேகரன் அவர்களுடனான இச்சந்திப்பு எமது பேராயர் கலாநிதி பத்மதயாளன் அவர்களுக்கும், எமது குருவானவர்களுக்கும், இறைமக்களுக்கும் பயனுள்ளதாகவும், ஊழிய உறவுகளை புதிப்பிப்பதாகவும் அமைந்தது.
செய்தி: யாழ் ஆதீன தொடர்புத் துறை.